அமுதம் தமிழ் மாத இதழ்

இணைந்திடுங்கள்
எழுத்தாளர்கள்

நீங்கள் கதை, கவிதை, நகைச்சுவைத் துணுக்குகள் என எழுதும் ஆர்வம் உடையவரா? உங்கள் படைப்புகளை வெளியிட அமுதம் இதழை தளமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். வேறு இதழ்களில் இழுதிய அனுபவம் உங்களுக்கு இல்லையா? கவலை வேண்டாம், அமுதம் உங்கள் படைப்புகளின் தரத்தினை மட்டுமே விரும்புகிறது. மேலும், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பல்துறை சார்ந்த முனைவர்கள் என அனைவரையும், தங்கள் துறை சார்ந்து சிறு செய்திகளாகவோ, கட்டுரைகளாகவோ எழுதும்படி அழைக்கிறோம்.
புரவலர்கள்

அமுதம் ஒரு சிற்றிதழ் என்பதால், பொருளாதார ரீதியாக உதவி செய்ய புரவலர்கள் தேவைப்படுகின்றனர். விளம்பரமாகவோ, புரவலர் சந்தாவாகவோ நீங்கள் வழங்கும் சிறு தொகை இதழ் தொடர்ந்து வெளிவர உதவும். மேலும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இயங்கும் நூலகங்களுக்கு இதழினை அனுப்பவும் புரவலர்கள் தேவை…
விளம்பரதாரர்கள்

அமுதம் இதழ் தற்போது நூல் வடிவத்திலிருந்து மின்நூலாகவும் வெளிவருவதால், இதழில் இடம்பெறும் விளம்பரகள் உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களின் கவனத்தை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே விளம்பரதாரர்கள் தங்கள் விளம்பர தேவைக்கு எங்களை அணுகும்படி கேட்டுக்கொள்கிறோம்.
தன்னார்வலர்கள்

நீங்கள் பத்திரிகைத் துறையில் அனுபவம் பெற ஆர்வம் உள்ளவரா? உங்களது பங்களிப்பிற்காகவே காத்திருக்கிறோம். நீங்கள் உலகின் எந்த பகுதியில் இருந்தாலும், அமுதத்திற்காக உங்கள் பகுதிக்கான முகவராக அல்லது செய்தியாளராக பணியாற்ற உங்களை அழைக்கிறோம். மேலும் விபரங்களுக்கு நேரிடையாக தொடர்பு கொள்ளுங்கள்…